Term Test-க்கு ஒரு வாரம் முன்னர் மட்டும் படிக்கத் தொடங்கினால் மன அழுத்தமும், மறதியும் அதிகம். 4 வாரங்கள் முன்பே ஒரு எளிய திட்டத்துடன் தொடங்கினால், தினமும் 1½ – 2 மணி நேரம் படித்தாலே போதும். Grade 6 முதல் 11 வரையான மாணவர்களுக்காக நாங்கள் வகுப்பறையில் பயன்படுத்தும் முறை இதோ.

வாரம் 1 — பாடத்திட்டத்தைப் பட்டியலிடுங்கள்

  • ஒவ்வொரு பாடத்துக்கும் இந்தத் தவணையில் கற்ற அலகுகளை (units) பட்டியலிடுங்கள். ஆசிரியர் தந்த syllabus அல்லது பயிற்சிப் புத்தகத்தைப் பாருங்கள்.
  • ஒவ்வொரு அலகுக்கும் அருகில் 🟢 நன்றாகத் தெரியும் / 🟡 ஓரளவு / 🔴 கடினம் எனக் குறியிடுங்கள்.
  • விடுபட்ட குறிப்புகளை (notes) நண்பர்களிடம் பெற்று முழுமைப்படுத்துங்கள்.

வாரம் 2 — கடினமானவற்றை முதலில்

  • 🔴 அலகுகளுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். மனம் புத்துணர்வாக இருக்கும் காலை அல்லது பாடசாலை முடிந்த உடனான நேரம் சிறந்தது.
  • Active recall: வாசித்த பின் புத்தகத்தை மூடி, நினைவிலிருந்து முக்கியக் குறிப்புகளை எழுதிப் பாருங்கள். வெறுமனே மீண்டும் வாசிப்பதைவிட இது பல மடங்கு பயனுள்ளது.
  • 25 நிமிடம் படிப்பு + 5 நிமிடம் ஓய்வு (Pomodoro முறை) — கவனம் சிதறாது.

வாரம் 3 — Past papers பயிற்சி

இதுதான் மிக முக்கியமான வாரம். கடந்தகால வினாத்தாள்கள் பரீட்சையில் எந்த மாதிரியான வினாக்கள் வரும், எந்தப் பகுதிகளுக்கு அதிக புள்ளிகள் என்பதைக் காட்டும்.

  • எங்கள் இணையதளத்தில் Grade 1 – 13 இலவச Term Test past papers உள்ளன — உங்கள் தரத்தைத் தெரிவு செய்து பதிவிறக்குங்கள்.
  • ஒவ்வொரு பாடத்துக்கும் குறைந்தது ஒரு வினாத்தாளை நேரம் வைத்து எழுதுங்கள்.
  • தவறிய வினாக்களை planner-இன் "Past Paper Tracker" பகுதியில் பதிவு செய்யுங்கள்; அவற்றை வாரம் 4-இல் மீண்டும் பாருங்கள்.

வாரம் 4 — மீட்டல் (Revision) & ஓய்வு

  • ஒவ்வொரு அலகுக்கும் ஒரு பக்கச் சுருக்கக் குறிப்பு (summary sheet) தயாரியுங்கள்.
  • Tracker-இல் உள்ள தவறிய வினாக்களை மீண்டும் செய்யுங்கள்.
  • பரீட்சைக்கு முந்தைய இரவு புதிதாக எதையும் படிக்க வேண்டாம். குறைந்தது 8 மணி நேரம் உறங்குங்கள்.

தினசரி அட்டவணை — உதாரணம் (பாடசாலை நாள்)

நேரம்செயல்
3:30 – 4:30ஓய்வு, உணவு, விளையாட்டு
4:30 – 5:20கடினமான பாடம் (2 × 25 நிமிடம்)
5:20 – 5:30இடைவேளை
5:30 – 6:00இலகுவான பாடம் / வீட்டுப்பாடம்
இரவு 8:00 – 8:30அன்று படித்ததை நினைவிலிருந்து எழுதுதல் (active recall)
பெற்றோருக்கு
  • படிப்பு நேரத்தில் phone, TV தொலைவில் இருக்கட்டும் — வீட்டில் அமைதியான ஒரு இடத்தை ஒதுக்குங்கள்.
  • புள்ளிகளை விட, திட்டத்தைப் பின்பற்றியதைப் பாராட்டுங்கள். Planner-இல் ✔ குறிகள் அதிகரிப்பதே முன்னேற்றம்.

உங்கள் planner-ஐப் பதிவிறக்குங்கள்

மேலே உள்ள 4 வாரத் திட்டத்தை எளிதாகப் பின்பற்ற, அச்சிடக்கூடிய study planner-ஐ இலவசமாக வழங்குகிறோம் — பாடப் பட்டியல், 4 வார அட்டவணை, past paper tracker ஆகியவை அடங்கியது. ICT பாடத்துக்கு மேலதிகப் பயிற்சிக்கு: Python Code Tracing வழிகாட்டி.